Thursday 28 December 2017

திருவையாற்றில் ஒரு திருப்பம் :





சின்னகுஞ்சி அம்மா சாய்மாதா அவர்கள் கடந்த ஒரு வருடமாக பல வெளியிடங்களுக்கு பயணம் செய்கிறார்கள். அவற்றில் திருவையாற்றில் பொன்னாவரை என்ற சுவாமிகளின் மடம். அங்கு அன்னை வரும் பொழுதெல்லாம் தங்கி அன்னதானம் செய்வது வழக்கம். அப்படி ஒருமுறை அன்னதானம் செய்யும் பொழுது அங்குள்ள பீடத்தில் இராமலிங்க சுவாமிகளின் சீடரான இராமலிங்க சுவாமிகளின் சமாதியும் அடங்கியுள்ளது. அதனை அன்னையின் பக்தர் ஒருவர் தன் கைபேசியின் மூலம் புகைபடம் எடுத்தார் அதில் இராமலிங்க சுவாமிகளின் சகஸ்தர தலத்தில் ஒரு ஒளியும், நாபியால் ஒரு ஒளியும், தகராலையத்தில் ஒரு பாபாவின் திரு உருவமும் தோன்றி இருந்தது அற்புதம் ஆகும், அன்னையும் அதை கண்டு ஆமோதித்ததும் உண்டு.

நம்முடன் தாய் நமக்காக தாய்:




ஸ்ரீ சின்னகுஞ்சி அம்மா தாய் மாதா நம்முடன் வாழ்கிறார். நமக்காகவே வாழ்கிறார். நம்பினார் கெடுவதில்லை என்பது நான்கு மறை தீர்ப்பு என்பதற்கு இணங்க உலக தந்தை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மீண்டும் அன்னை சின்ன குஞ்சி சாய்மாதாவாக அவதரித்து இருக்கின்றார். பூந்தோட்டத்தில் பூத்தரிக்கும் சரஸ்வதிக்கு தாயிக்கு சகஸ்ரதலமாக நம்முடன் தாய் நமக்காகவே தாய் என்பதை சாய்மாதா சின்னகுஞ்சி அம்மாவை காணவரும் அனைத்து மக்களும் அனுபவ பூர்வமாக உணர்ந்த உண்மை.
தியானம் மூலம்க்குரோர் மூர்த்தி
பூஜா மூலம்க்குரோர் பதம்
மந்த்4ம் மூலம்க்குரோர் வாக்கியம்
மோஷம் மூலம்க்குரோர் க்ருபா
குருவே சரணம்
அனைவரும் சாய்மாதாவை பணிக சாந்தி உண்டாகட்டும்
என்றோ நடந்தவை :


ஸ்ரீ சின்னகுஞ்சி அம்மா என்றோ நடந்தது மட்டும் அல்லாமல் எங்கோ நடக்க போவதையும் அறிந்து நம்மையும் அறிய வைப்பார்கள். அவற்றில் சில சில இடங்களில் நட்த அசம்பாவிதங்களையும் மட்டும் இல்லாமல் நடக்கவிருக்கும் அசம்பாவிதங்களையும் முன்பே தெரியப்படுத்தியதும் உண்டு. அப்படி அசம்பாவிதங்கள் நடக்கும் பொழுது அன்னை உண்பதோ உறங்குவதோ கிடையாது. இரத்த வாடை வருகிறது என்று சொல்லி கொண்டே இருப்பார்கள். தான் உணவு உணவும் கூட சகப்பாக இருக்கிறது என்று கூறுவார்கள். பூந்தோட்டம் அருகில் உள்ள முடிகொண்டான் திருமலைராஜன் ஆற்று பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்தும் ஒன்று உலகையே உரைய வைத்த சுனாமி முதல் சுடுகாட்டிற்கு செல்லும் சடலங்கள் வரை அன்னையின் அருள்பேச்சில் அர்த்த்துடன் வெளிவரும். முன் ஜென்மங்களின் தொடர்புகளையும் சிலருக்கு தெரியபடுத்தியது உண்டு. சில இடங்களில் உள்ள சமாதிகளையும் சுட்டிக்காட்டி பேசியதும் உண்டு. ஆனால் அந்த சமாதி இருக்கும் இடம் இன்று அடையாளம் தெரியாமல் இருக்கும். அங்கு சென்று விசாரித்து பார்த்தால் சமாதி இருப்பதை உணரலாம். முக்காலமும் உணர்ந்த ஞானிகளுக்கு என்றோ எங்கேயோ எப்போதோ நடந்தவைகளை சொல்வது ஒன்று அதிசயம் இல்லைதானே